80 லட்சம் கோடி செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் காரசாரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் தேர்தல் ஆய்வு அமைப்பான, சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பாலிடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தல் தான், மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, தேர்தல் வரலாற்றில் அமைய உள்ளது.

இந்த தேர்தலுக்கு, 80 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, 1,03,98,50,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தெரிய வந்துள்ளது.

கடந்த, 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகம். மேலும், நன்கொடை வாயிலாக, 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் ஜனாதிபதி வேட்பாளராக, ஜோ பிடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools