• பஜாஜ் ஃபின்சர்வ் செயலி & வலைதளத்தின் மூலம் செய்யப்படும் டெபாசிட்டுகள் (வைப்புத் தொகைகள்) மீது ஒப்பீட்டளவில் 8.85% என்ற உயர்வான வட்டி விகிதத்தை வழங்குகிறது
• சிரமம் இல்லாத செயல்பாட்டின் மூலம் டிஜிட்டல் செயல்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்க டெபாசிட்தாரர்களை ஊக்குவிக்கிறது
புனே/மும்பை, ஜனவரி 3, 2024: இந்நாட்டின் மிகப்பெரிய நிதிசார் சேவைகள் குழுமங்களுள் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ்-ன் ஒரு அங்கமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் செயலி மற்றும் வலைதளம் வழியாக செய்யப்படும் டெபாசிட்டுகள் (வைப்புத் தொகைகள்) மீது 8.85% வரை பிரத்யேக வட்டி வீதங்களை வழங்கும் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டம் அறிமுகம் செய்யப்படுவதை இன்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.
பழைய ஆண்டு முடிந்து புதிய ஆண்டு பிறந்திருக்கும் நிகழ்வையொட்டி இந்த டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமும் சேமிப்பு அனுபவத்தில் ஒரு புதிய நிலைமாற்றத்தை கொண்டுவருகிறது. டெபாசிட்டுகளை செய்வதற்கு டிஜிட்டல் மற்றும் உதவப்படும் டிஜிட்டல் வழிமுறையை பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதன் வழியாக பஜாஜ் ஃபைனான்ஸ் இதை சாத்தியமாக்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தில் டெபாசிட் செய்வதற்கான பயணம் எளிதானது, பாதுகாப்பானது மற்றும் சிரமமற்றது; மற்றும் FD புக்கிங் செயல்முறையை உடனடியானதாக ஆக்குகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தின் மீது 42 மாதங்கள் காலஅளவிற்கு புக்கிங் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்காக மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8.85% வரை வட்டியினை பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்குகிறது. இத்திட்டம் 2024 ஜனவரி 2-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. 60 ஆண்டுகள் வயதுக்கு குறைவான டெபாசிட்தாரர்கள், ஒரு ஆண்டுக்கு 8.60% வரை வட்டியினை ஈட்டலாம். 42 மாதங்கள் காலஅளவிற்கு ரூ. 5 கோடி வரையிலான தொகையை புதிதாக டெபாசிட் செய்வது மற்றும் முதிர்ச்சியடையும் டெபாசிட்களை மீண்டும் புதுப்பிக்கும்போது, திருத்தியமைக்கப்பட்ட வட்டி வீதங்கள் இவைகளுக்கு பொருந்தும்.
பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் முதலீடுகள் துறையின் தலைவர் திரு. சச்சின் சிக்கா கூறியதாவது: “சிரமம் இல்லாத எமது செயல்முறைகள், கவர்ச்சிகர வட்டி விகிதங்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு தோழமையான கொள்கைகள் ஆகியவை பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மீது நுகர்வோர்களின் அனுபவத்தை வரையறை செய்கிற சிறப்பு அம்சங்களாகும். 2 ஆண்டுகள் காலஅளவில் எமது மொத்த டெபாசிட்களின் தொகை 2x மடங்கு வளர்ச்சியடைந்திருப்பது, பஜாஜ் பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கைக்கு நேர்த்தியான சான்றாகும். எமது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இப்போது, டிஜிட்டல் வழிமுறையை முதலில் பயன்படுத்துமாறு அதற்கு முன்னுரிமை அளிக்க டெபாசிட்தாரர்களை தூண்டுகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் மிக உயர்வான வட்டி விகிதங்களோடு தொடக்கத்திலிருந்து இறுதிவரை மிக எளிமையான டிஜிட்டல் பயணமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்களை செய்யும் இனிய அனுபவத்தை இது வழங்குகிறது.”
2023 செப்டம்பர் 30 அன்று அதன் செயலி தளத்தில் 44.68 மில்லியன் வலைதள பயன்பாட்டாளர்களோடு மொத்தத்தில் 76.56 மில்லியன் வாடிக்கையாளர்களை பஜாஜ் ஃபைனான்ஸ் கொண்டிருக்கிறது. data.io அறிக்கையின்படி இந்தியாவில் ஃபிளேஸ்டோரில் நிதிசார் சார்ந்த பிரிவில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளுள் 4வது இடத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் செயலி இருக்கிறது.
2023 செப்டம்பர் 30 அன்று 1.4 மில்லியனுக்கும் அதிகமான டெபாசிட்கள் மற்றும் ரூ. 54,821 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைக்கப்பட்ட டெபாசிட் புத்தகத்துடன் இந்நாட்டில் மக்களிடமிருந்து மிக அதிகமாக டெபாசிட்களைப் பெறும் வங்கி சாரா நிதிநிறுவனமாக (NBFC) இந்நிறுவனம் உருவெடுத்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு அதிக பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தேர்வை வழங்கும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் செயல்திட்டம், கிரிசில்-ன் AAA/ஸ்டேபில் மற்றும் ICRA’ன் AAA (ஸ்டேபில்) என்ற மிக உயர்வான பாதுகாப்பு நிலைப்புத்தன்மை தரநிலைகளை கொண்டிருக்கிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் செயலி, முதலீட்டு சந்தை அமைவிட வசதியையும் சேர்த்து வழங்குகிறது; இதில், பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளின் விரிவான அணிவரிசையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
- Bajaj Finance FD Rates (% per annum) for Non-Senior Citizens, w.e.f. 02 January 2024
- Bajaj Finance Digital FD (available only on Bajaj Finserv App and website)
Period (months) | Cumulative |
| Non-Cumulative | |||
At Maturity | Monthly | Quarterly | Half Yearly | Annual | ||
42 months | 8.60 | 8.28 | 8.34 | 8.42 | 8.60 |
- Regular Period
Period (months) | Cumulative |
| Non-Cumulative | |||
At Maturity | Monthly | Quarterly | Half Yearly | Annual | ||
12 – 23 months | 7.40 | 7.16 | 7.20 | 7.27 | 7.40 | |
>15 – 23 months | 7.50 | 7.25 | 7.30 | 7.36 | 7.50 | |
24 months | 7.55 | 7.30 | 7.35 | 7.41 | 7.55 | |
25 – 35 months | 7.35 | 7.11 | 7.16 | 7.22 | 7.35 | |
36 – 60 months | 8.05 | 7.77 | 7.82 | 7.89 | 8.05 |
- Special Period
Period (months) | Cumulative |
| Non-Cumulative | |||
At Maturity | Monthly | Quarterly | Half Yearly | Annual | ||
15 months | 7.45 | 7.21 | 7.25 | 7.32 | 7.45 | |
18 months | 7.40 | 7.16 | 7.20 | 7.27 | 7.40 | |
22 months | 7.50 | 7.25 | 7.30 | 7.36 | 7.50 | |
30 months | 7.45 | 7.21 | 7.25 | 7.32 | 7.45 | |
33 months | 7.75 | 7.49 | 7.53 | 7.61 | 7.75 | |
44 months | 8.35 | 8.05 | 8.10 | 8.18 | 8.35 |
- Bajaj Finance FD Rates (% per annum) for Senior Citizens, w.e.f. 02 January 2024
- Bajaj Finance Digital FD (available only on Bajaj Finserv App and website)
Period (months) | Cumulative |
| Non-Cumulative | |||
At Maturity | Monthly | Quarterly | Half Yearly | Annual | ||
42 months | 8.85 | 8.51 | 8.57 | 8.66 | 8.85 |
- Regular Period
Period (months) | Cumulative |
| Non-Cumulative | |||
At Maturity | Monthly | Quarterly | Half Yearly | Annual | ||
12 – 23 months | 7.65 | 7.39 | 7.44 | 7.51 | 7.65 | |
>15 – 23 months | 7.75 | 7.49 | 7.53 | 7.61 | 7.75 | |
24 months | 7.80 | 7.53 | 7.58 | 7.65 | 7.80 | |
25 – 35 months | 7.60 | 7.35 | 7.39 | 7.46 | 7.60 | |
36 – 60 months | 8.30 | 8.00 | 8.05 | 8.13 | 8.30 |
- Special Period
Period (months) | Cumulative |
| Non-Cumulative | |||
At Maturity | Monthly | Quarterly | Half Yearly | Annual | ||
15 months | 7.70 | 7.44 | 7.49 | 7.56 | 7.70 | |
18 months | 7.65 | 7.39 | 7.44 | 7.51 | 7.65 | |
22 months | 7.75 | 7.49 | 7.53 | 7.61 | 7.75 | |
30 months | 7.70 | 7.44 | 7.49 | 7.56 | 7.70 | |
33 months | 8.00 | 7.72 | 7.77 | 7.85 | 8.00 | |
44 months | 8.60 | 8.28 | 8.34 | 8.42 | 8.60 |
About Bajaj Finance Limited
Bajaj Finance Ltd. (‘BFL’, ‘Bajaj Finance’, or ‘the Company’), a subsidiary of Bajaj Finserv Ltd., is a deposit-taking Non-Banking Financial Company (NBFC-D) registered with the Reserve Bank of India (RBI) and is classified as an NBFC-Investment and Credit Company (NBFC-ICC). BFL is engaged in the business of lending and acceptance of deposits. It has a diversified lending portfolio across retail, SMEs, and commercial customers with significant presence in both urban and rural India. It accepts public and corporate deposits and offers a variety of financial services products to its customers. BFL, a thirty-six-year-old enterprise, has now become a leading player in the NBFC sector in India and on a consolidated basis, it has a franchise of 76.56 million customers. BFL has the highest domestic credit rating of AAA/Stable for long-term borrowing, A1+ for short-term borrowing, and CRISIL AAA/Stable & [ICRA]AAA(Stable) for its FD program. It has a long-term issuer credit rating of BBB-/Stable a and a short-term rating of A-3 by S&P Global ratings. To know more, visit www.bajajfinserv.in/