8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த 7 யூடியூப் சேனல்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் யூடியூப் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது அமைதி தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட சேனல்களில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.