Tamilசெய்திகள்

8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.