கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
படத்தில், கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில், சந்துரு கதாபாத்திரத்தின் மகனாக சித்தார்த் வருவதாக கூறுகிறார்கள்.
காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் படக்குழுவில் இணைந்திருக்கிறார்கள். அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய காட்சிகளுக்காக படக்குழு தைவான் செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.