75 வயது முதியவர்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
மத்தியபிரதேசத்தில் 75 வயது முதியவர்களுக்கு, அதாவது உறவினர்களின் உதவி இல்லாமல் தனியாக வசிக்கும் 75 வயதுடையவர்களுக்கு வீட்டிற்கே ரேஷன் மளிகை பொருட்கள் கொண்டுவந்து கொடுக்கப்படும். அதே நேரத்தில் உறவினர்கள் இருந்தால், அவர்களில் ஒருவரை ரேஷன் பொருட்களை வாங்க அவர்கள் நியமித்துக்கொள்ளலாம்.
இந்த தகவலை மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மந்திரி தெரிவித்தார்.
“மாநிலத்தில் 83 லட்சம் பேர் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். போலி அட்டைதாரர்களை கண்டுபிடிக்க ரேஷன் மித்ரா என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இதுவரை 1 கோடியே 18 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களில் 37 சதவீதம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன” என்றும் அவர் கூறினார்.