74வது சுதந்திர தின விழா – டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சுதந்திர தின விழா தொடக்கமாக டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியேற்றினார்.