X

71 வது உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெறும் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை.

இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், “71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது” என்றார்.