X

7 பேர் விடுதலைக்காக மீண்டும் போராட்டம் – சீமான் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த ரவிச்சந்திரன் பரோலில் வந்துள்ளார். அருப்புக்கோட்டையில் தாயாருடன் அவர் தங்கியுள்ளார். அவரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். இதனை தொடர்ந்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரவிச்சந்திரன் 28 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கையை நிராகரிக்காமலும், கவர்னர் அதில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதும் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்வது போன்று உள்ளது. 7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தி வெற்றி காண்போம்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் மட்டுமே போட்டி போட முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. கூறினார். நாங்களாவது தேர்தலில் தனித்து நின்று சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால் காங்கிரஸ் கட்சி 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்துள்ளனர். தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட குறைவாகவே பெறுவர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டோம். திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வரும் தேர்தலில் எங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news