7 வருடங்களுக்குப் பிறகு கன்னட சினிமாவில் நடிக்கும் திரிஷா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா, அவ்வப்போது பிற மொழி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘பவர்’ படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமான அவர், அதன்பின் கன்னட படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், தற்போது 7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் திரிஷா. யு டர்ன் படத்தை இயக்கிய பவன் குமார் இயக்கும் புதிய படத்தில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகை திரிஷா கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.