ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக கருதப்படும் இவ்விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன் பட்டியலை பார்ப்போம்
சிறந்த தமிழ் படம் – அசுரன்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகர் – மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)
சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)
சிறந்த இயக்குனர் – சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் – இந்தி)
சிறந்த படம் – மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – விக்ரம் மோர்(கன்னடம்)
சிறந்த நடன அமைப்பாளர் – ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (விஸ்வாசம்)
சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)
சிறந்த வசனகர்த்தா – விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி
சிறந்த ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)
சிறந்த ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)
சிறந்த அறிமுக இயக்குனர் – மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)
சிறந்த குழந்தைகள் படம் – கஸ்தூரி (இந்தி)
சிறந்த படத்தொகுப்பு – நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)
சிறந்த பாடகர் – பி.பராக்(கேசரி, இந்தி)
சிறந்த பாடகி – சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)
சிறப்பு பிரிவு, ஜூரி விருது – ஒத்த செருப்பு (தமிழ்)