6 வயது சிறுமி கற்பழித்து கொலை – ராஜஸ்தானில் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி வகுப்பு முடிந்து மாலை 3 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

நேற்று அப்பகுதியில் புதர்களுக்கு இடையே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று, கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது.

சிறுமியின் கழுத்தில் அவர் சீருடையில் அணிந்திருந்த பெல்ட்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? எத்தனை பேர்? என்பது இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools