X

6 மாநிலங்களின் 7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு இது பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்புர், பகேஷ்வர், துப்கரி தொகுதிகள் பா.ஜனதா வசம் இருந்தவை. உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள தொகுதிகள் முறையே சமாஜ்வாடி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவிடம் இருந்தவை. திரிபுரா மாநில தொகுதி சிபிஎம் இடம் இருந்தவை. புதுப்பள்ளி காங்கிரசிடம் இருந்தவை. தாரா சிங் சவுகான் பா.ஜனதாவில் மீண்டும் இணைந்ததால் உ.பி. கோசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி அகிலேஷ் யாதவ் கூட்டணி பலத்தை நிரூபிக்க விரும்பும். அதேவேளையில் கேரளாவில் உம்மன்சாண்டி மகன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. திரிபுராவில் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிக்க இருப்பதாக சிபிஎம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற போது முறைகேடு நடைபெற்றதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக சிபிஎம், காங்கிரஸ் இணைந்துள்ளன. மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil news