5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு மத்திய அரசு அமல்படுத்தியது – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜியின் சகோதரர் கனகசபை சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதைத்தொடர்ந்து மன்னார்குடி அருகில் பெருகவாழ்ந்தானில் உள்ள அமைச்சர் இரா.காமராஜ் சகோதரர் இல்லத்திற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை சென்றார். அங்கு மறைந்த கனகசபை குடும்பத்தினர் மற்றும் அமைச்சர் இரா.காமராஜ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இத்திட்டம் குறித்து மக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news