54வது சிஆர்பிஎப் தினம் – குடியரசு தலைவர் விருதுகள் வழங்கினார்

மத்திய காவல் ஆயுதப்படை மற்றும் துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படை மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) ஆகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துகிறது.

சமீப காலங்களில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கும், பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பிரச்சனைக்குரிய பகுதிகளான ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9ம் தேதி சிஆர்பிஎப் வீரர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பணியில் இருந்த வீரர்கள் பலியாகினர். இதையடுத்து 54வது ஆண்டு சிஆர்பிஎப் வீரர் தினமான இன்று, நாட்டிற்காக உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் தேசிய காவல் நினைவகத்தில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools