500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2022-2023-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் 1,250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 20 கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள வரைவோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து.

10 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் முகமது நசிமுத்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகவளாகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 50 சென்ட் நிலப்பரப்பில், 10,600 சதுர அடி கட்டிட பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வளாகத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவல கங்களான தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவை அமையப் பெற்றுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news