5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது என்ற விவரம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மோகித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, துருவ் ஷோரே, சைத்தான்யா பிஷ்னோய் ஆகிய ஐந்து வீரர்களை வெளியேற்றியுள்ளது. 14.60 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் தீபக் ஹூடா, மார்ட்டின் கப்தில், ரிக்கி புய், யூசுப் பதான் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 17 கோடி ரூபாய் வைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், அக்ஷ்தீப் நாத், நாதன் கவுல்டர்-நைல், கொலின் டி கிராண்ட்ஹோம், பிரயாஸ் பர்மன், டிம் சவுத்தி, குல்வான்ட் கெஜ்ரோலியா, ஹிம்மன் சிங், கிளாசன், மிலிந்த் குமார், ஸ்டெயின் ஆகிய 12 பேரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.90 கோடி ரூபாய் வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஆஷ்டோன் டர்னர், ஒசானே தாமஸ், ஷுபம் ரஞ்சன், பிரசாந்த் சோப்ரா, இஷ் சோதி, ஆர்யமான் பிர்லா, ஜெய்தேவ் உனத்கட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, லியம் லிவிங்ஸ்டன், சுதேசன் மிதுன் ஆகிய 11 பேரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 28.90 கோடி ரூபாயை வைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1. ராபின் உத்தப்பா, 2. கிறிஸ் லின், 3. பியூஷ் சாவ்லா, 4. ஜோ டென்லி, 5. யர்ரா பிரித்விராஜ், 6. நிகில் நாயக், 7. கேசி கரியப்பா, 8. மேத்யூ கெல்லி, 9. ஸ்ரீகாந்த் முண்டே, 10. கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 35.65 கோடி ரூபாயை வைத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 1. டேவிட் மில்லர், 2. அண்ட்ரூ டை, 4. சாம் குர்ரான், 5. வருண் சக்ரவர்த்தி ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 42.70 கோடி ரூபாய் வைத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 1. கிறிஸ் மோரிஸ், 2. கொலின் முன்ரோ, 3. ஹனுமா விஹாரி, 4. அங்குஷ் பெய்ன்ஸ், 5. கொலின் இங்க்ராம் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.85 கோடி ரூபாய் வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 1. யுவராஜ் சிங், 2. எவின் லெவிஸ், 3. ஆடம் மில்னே, 4. ஜேசன் பெரெண்டர்ஃப், 5. பரிந்தர் சரண், 6. பென் கட்டிங், 7. பங்கஜ் ஜெய்ஸ்வால் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 13.05 கோடி ரூபாய் வைத்துள்ளது.