Tamilசினிமா

5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கீரவாணி இசையில் நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடி உள்ளனர்.

அதன்படி தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர். முன்னணி பாடகர்கள் பாடி உள்ளதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.