5 மாநிலங்களில் கன மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.