ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
5 மாநில தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. 5 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அசோக் கெலாட்டும், பூபேஷ் பாகேலும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சிவராஜ் சிங் சவுகான் காரணமாக எம்.பி.யில் பிரச்சினைகள் உள்ளன. மக்கள் அவருக்கு எதிராக உள்ளனர். எனவே, 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு நிச்சயம் அமையும் என எதிர்பார்க்கிறோம், அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என தெரிவித்தார்.