X

5 ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும். வரும் 4-ந்தேதி இந்த புயலானது சென்னை-மசூலிப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டது.

இந்நிலையில் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது, 4-ந்தேதி புயல் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5-ந்தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamil news