47 வது புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது.

புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார். தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news