47வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை விஜய்!

சினிமாவில் நகைச்சுவை, நடனம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றிபெறுவதே ஒரு நடிகருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தரும். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு ‘தமிழன்’, ‘பத்ரி’, ‘பகவதி’ போன்ற படங்கள் ஆக்‌ஷன் ஹீரோ இமேஜை படிப்படியாக வடிவமைத்தன.

குறிப்பாக 2003-ல் வெளியான ‘திருமலை’ திரைப்படம் விஜய்யை ஒரு அசைக்க முடியாத மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது. பஞ்ச் வசனங்கள், வண்ணமயமான அறிமுகப் பாடல், மாஸான சண்டைக் காட்சிகள் என ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக விஜய்யை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது இந்தப் படத்தின் வெற்றி.

2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விஜய் ஆக்‌ஷன் படங்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினார். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்ததோடு, விஜய்யை ஒரு மாபெரும் மாஸ் நாயகனாக்கின. குறிப்பாக இந்தப் படங்களில் அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools