Tamilசெய்திகள்

40 கி.மீ வேகத்தில் சென்றால் அபராதம் இல்லை – போக்குவரத்து காவல்துறை விளக்கம்

சென்னையில் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் எவ்வளது வேகத்தில் வாகனங்களை ஓட்டலாம் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, காலை நேரத்தில 40 கி.மீ வேகத்தை தாண்ட கூடாது என்றும் இரவு நேரங்களில் 50 கி.மீ வேகத்தை மீறக்கூடாது என்றும் அறிவித்திருந்தது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேக கட்டுப்பாட்டு அளவை மாற்ற வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் காலை மற்றும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு வேகத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காலை 40 கி.மீ இரவில், 50 கி.மீ என்ற வேக அளவை மாற்ற போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதனால், காலை, இரவு பாதுகாப்பு வேக அளவை, அதிவேகம் தடுக்கும் கருவி மூலம் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. பாதுகாப்பான வேகம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 40 கி.மீ வேகத்தில் சென்றால் அபராதம் கிடையாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.