4 வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது – தினேஷ் கார்த்திக்

உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

உலக கோப்பை மிகப்பெரிய போட்டி. இதற்கான அணியில் இடம் பெறுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

அனைத்து போட்டிகளிலும் டோனிதான் விக்கெட் கீப்பராக இருப்பார். புகைப்படத்தில் மட்டுமே எனது படம் வரும். அவர் காயம் அடைந்தால் வாய்ப்பு வரும். சிறந்த பேட்ஸ்மேனாக வாய்ப்பு அளிக்கப்படும். 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது. பின்வரிசையில் ஆடினாலும் என்னால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியும்.

உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணி திறமை வாய்ந்தது. நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் எங்களது கனவு நனவாகி இருக்கிறது என்று மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news