X

4 சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

தமிழ்நாட்டில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுடன் நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தவிர காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் மோகன் மற்றும் சூலூர் தொகுதியில் கந்தசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Tags: south news