X

4வது முறையாக ஐபில் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி பரிசு

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடி வழங்கப்பட்டது.

Tags: sports news