Tamilவிளையாட்டு

4வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு 383 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுகளும், ஜாக் லீச், கிரெய்க் ஒவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன்னும், ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஜோஸ் பட்லர் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

196 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. டேவிட் வார்னர் தொடர்ந்து 3-வது முறையாக டக்-அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் (6 ரன்), லபுஸ்சேன் (11 ரன்), டிராவிஸ் ஹெட் (12 ரன்) உள்ளிட்டோரும் வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.

பொறுப்புடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்துடன் மேத்யூ வேட் இணைந்து அணியை மீட்டார். இருவரும் ரன்களை சேர்த்தனர்.

நிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதமடித்து அசத்தினார், அவர் 82 ரன்னில் அவுட்டானார். மேத்யூ வேட் 34 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா கை ஓங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *