ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் 38 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழுவை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்விவரம் வருமாறு:-
தஞ்சை தெற்கு மாவட்ட பணிக்குழுவில் வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்பட 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணு, நவநீத கிருஷ்ணன் எம்.பி. உள்பட 5 பேர்.
சேலம் புறநகர் மாவட்டத்துக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, குமரகுரு, வெங்கடாசலம் உள்பட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட குழுவில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முத்துக்கருப்பன் எம்.பி., இன்பதுரை எம்.எல்.ஏ. உள்பட 5 பேர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி., திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் உள்பட 6 பேர்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 5 பேர்.
ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்பட 5 பேரும், ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன், வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர்.
திருப்பூர் புறநகர் மாவட்டத்திற்கு சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 6 பேர். நாமக்கல் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உள்பட 5 பேர்.
கோவை புறநகர் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அமைச்சர் வேலுமணி உள்பட 5 பேர். கோவை மாநகர் மாவட்டத்திற்கு அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் அருண்குமார், அர்ஜூனன் உள்பட 6 பேர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் வளர்மதி, சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் கோகுல இந்திரா, அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட 8 பேர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் உதயகுமார் உள்பட 7 பேர்.
கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 6 பேர், கடலூர் மத்திய மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட 5 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.அன்பழகன் உள்பட 7 பேரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர் உள்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்திற்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் காமராஜ் உள்பட 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்பட 4 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 5 பேரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜிலா சத்தியநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், செல்வமோகன் தாஸ் பாண்டியன் உள்பட 6 பேர்.
திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் உள்பட 4 பேர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் கே.சி.வீரமணி உள்பட 6 பேர், விருதுநகர் மாவட்டத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. உள்பட 7 பேர்.
கரூர் மாவட்டத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 6 பேர், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் ராஜலட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், சண்முகநாதன் உள்பட 7 பேர்.
சிவகங்கை மாவட்டத்துக்கு அமைச்சர் பாஸ்கரன் உள்பட 6 பேர், அரியலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் வளர்மதி உள்பட 6 பேர், திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு செ.மா.வேலுச்சாமி உள்பட 6 பேர், திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு பொன்னுசாமி சிவபதி உள்பட 6 பேர், நீலகிரி மாவட்டத்துக்கு ஏ.கே.செல்வராஜ் எம்.பி. உள்பட 6 பேர்.
கடலூர் கிழக்கு மாவட்டத்துக்கு அமைப்பு செயலாளர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், சத்யா பன்னீர் செல்வம், கே.ஏ.பாண்டியன் உள்பட 7 பேர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.