X

36 செயற்கைகோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் நாளை (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுகிறது.

ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது. தற்போது ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டுகள் 8 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட ஒன் வெப், இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பாரதிய நிறுவனத்தின் ஆதரவுடன் அதிவேக தாமதமில்லா உலகளாவிய தொலை தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.