ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியிலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடக்கிறது. தொடரை இழந்தாலும் கடைசி போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு போட்டியும் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது. தொடரை இழந்தாலும், ஜெயித்தாலும் அதில் இருந்து திரும்புவதற்கு மிகவும் கடினம். எல்லாவற்றையும் கொடுக்க முடியாது.
இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. விளையாட்டின் சிறிய பகுதிகள் எந்த வழியிலும் செல்லாம். பவர்பிளேயில் கூடுதலாக விக்கெட் வீழ்த்த வேண்டும். எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருப்பதாக நினைக்கிறேன். அதில் தவறு இல்லை. மைதானத்தில் பாதி வாய்ப்புகளை பெற வேண்டும். அது போட்டியை மாற்றும்’’ என்றார்.