3 பேருக்கு செம்மொழித் தமிழ் விருதுகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2020,21, 22க்கான செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று வழங்கப்பட்டது. விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு வழங்கினார். பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் ழான் லூய்க் செல்வியார், முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கப்பட்டது. மேலும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் 16 நூல்களையும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.