Tamilசினிமா

3 நாட்களில் ரூ.51 கோடி வசூலித்த தனுஷின் ‘வாத்தி’

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வாத்தி’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.