3 நாட்களில் ரூ.25 கோடி! – அடித்து நொறுக்கும் ‘டாக்டர்’ வசூல்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், டாக்டர் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.