அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதன் ஒருகட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.
தங்கள் போராட்டம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
கடுமையான நீட் தேர்வை தாண்டி மருத்துவ துறையில் நுழைவது சவாலான விசயம். இந்தநிலையில் ஒரு பக்கம் மருத்துவர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் சம்பளம் மிகவும் குறைவு.
எனவே அரசு உடனடியாக அரசு ஆணை எண்.354-ஐ மறுஆய்வு செய்து முழுமையான சம்பளம் கிடைக்க உத்தரவிடவேண்டும் .
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.