இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று தொடங்க இருந்தது. மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டது. மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படவில்லை.
இந்நிலையில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்தானது. இதையடுத்து, டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.