Tamilசெய்திகள்

3வது அலை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை – மருத்துவ நிபுணர் தகவல்

கொரோனா 2-வது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

அடுத்ததாக 3-வது அலை தாக்கப்போவதாக நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த மாதத்திலேயே அதன் தாக்கத்தை தொடங்கலாம் என்று கூறினார்கள்.

ஆனால் 3-வது அலை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை என்று பொதுசுகாதார மருத்துவ நிபுணரும் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனருமான டாக்டர் அனுராக் அகர்வால் கூறினார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது:

டெல்டா வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டது. 2-வது அலை பல மாநிலங்களில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் தாமதமாக 2-வது அலை தொடங்கியது.

கேரளாவிலும் சில மாநிலங்களிலும் 2-வது அலை தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. 3-வது அலை தாக்குவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.

2-வது அலை இன்னும் தொடர்ந்து நீடிக்கலாம். அது இன்னும் பல பகுதிகளில் தாக்குதலை தொடங்கவே இல்லை. அது மேலும் உயர்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு வேளை 3-வது அலை உருவாகினால் ஏற்கனவே தாக்கிய முதல் இரண்டு அலைகளையும் விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதிக மருத்துவ வசதிகள் தேவைப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.