28 ஆம் தேதி தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வருகிற 28-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே அன்று அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பணி நாளாக இயங்கும் என்று அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools