27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் சென்னையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே மழை பொழிவு அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1991-ம் அண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது. அதன் பிறகு 1996-ம் அண்டு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிகமாக மழை பெய்தது.
இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் நேற்று வரை இயல்பாக 1.6 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று ஒரே நாளில் இயல்பை விட 22 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.