25 வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி உள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து கொரோனா பரவலால் பல தடவை தள்ளிப்போனது.
இந்த நிலையில் சமீபத்தில் வருகிற ஏப்ரல் மாதம் நோ டைம் டூ டை படம் வெளியாகும் என்று அறிவித்தனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படம் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக வருகிற அக்டோபர் மாதம் ‘நோ டைம் டூ டை’ படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதனை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர்.