Tamilசெய்திகள்

25 பைசா எடுக்க வங்கிக்கு சென்று சிறை சென்ற அமெரிக்கர்

உலகத்தில் பல்வேறு நாடுகளில் கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் முதலாளித்துவத்தின் மகுடமாக விளங்கும் அமெரிக்கவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புளோரிடா மாகாணத்தின் சம்டர் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் வேண்டும் என்று மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகையையெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

இதனால் சற்று பொறுமை இழந்த மைக்கேல், ‘என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?’ என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரியை மிரட்டியதற்காகவும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.