Tamilசெய்திகள்

24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட புதின் – விமானம் நிலையத்திற்கே வந்து வரவேற்ற கிம் ஜாங்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் புதின் வருகையை ஒட்டி, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமான நிலையத்திற்கு விரைந்தார்.

வட கொரிய தலைநகர் பியாங்காங் விமான நிலையத்தற்கு வந்த அதிபர் புதினை நேரடியாக சென்று வரவேற்ற கிம் ஜாங் உன், அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார். பயணத்திற்கு முன்பு ரஷிய தொலைகாட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், வட கொரியா ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார்.

இரண்டாம் உலக போருக்கு பின் உருவாக்கப்பட்ட வட கொரியாவுடன் ரஷியா நீண்ட காலமாக நட்புறவில் இருந்து வருகிறது. மேலும், 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து, ரஷியா மற்றும் வட கொரியா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. ரஷிய போருக்காக வட கொரியா சார்பில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.