23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு

மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.

விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.

இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்” என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools