222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது – பாராளுமன்றத்தில் தகவல்
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம்வரை 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
இவர்களில், 96 பேர் குரூப் ஏ அதிகாரிகள், 126 பேர் குரூப் பி அதிகாரிகள் ஆவர்.
நேர்மையற்ற, திறமையற்ற ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப அடிப்படை விதிகள் 56(ஜே) பிரிவு அதிகாரம் அளிக்கிறது. அந்த விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் எம்.பி.க்கள் பங்களாக்களை புனரமைத்தது, பழுது பார்த்தது போன்ற பணிகளால் ரூ.193 கோடி செலவானதாக மக்களவையில் மத்திய வீட்டு வசதித்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.
எம்.பி.க்கள் வீட்டு பழுது பார்ப்பு செலவுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.