இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கு முன் இந்த ஆண்டில் ரோகித் சர்மா 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி இதுவரை 2,379 ரன்களை எடுத்திருந்தார்.
இன்னும் அவர் 9 ரன் எடுத்தால் ஒரே ஆண்டில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்புடன் இன்று களம் இறங்கினார். 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா – லோகேஷ் ராகுல் ஜோடி களம் இறங்கியது.
ரோகித் சர்மா பத்து பந்தில் 9 ரன்களை எட்டினார். அப்போது 22 வருடகால ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார். இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜெயசூர்யா 1997-ம் ஆண்டில் 2387 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.