இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* வரும் 22-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
* காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24-ந்தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
* வரும் 23, 24-ந்தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
* மே 24 மற்றும் 25-ந்தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24-ந்தேதி முதல் வடக்கு வங்கக்கடலில் 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.
* வரும் 23-ந்தேதி முதல் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு சென்ற மீனவர்கள் மே 23-ந்தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.