21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற்ற நடால் – வாழ்த்து தெரிவித்த பெடரர், ஜோகோவிச்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நடால் படைத்தார்.

இந்நிலையில், ரபேல் நடாலின் சாதனைக்கு சக வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பெடரர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராமில், உங்களது அசாத்தியமான பணி நெறிமுறை, அர்ப்பணிப்பு மற்றும் போராடும் குணம் எனக்கும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பிறருக்கும் உத்வேகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ஜோகோவிச் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அற்புதமான சாதனை. உங்களின் போராட்டக் குணம் மற்றொரு முறை வெற்றி பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools