2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியானது – முதல் போட்டி சென்னையில் நடக்கிறது

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2-ம் கட்ட அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகிறது. இதனை தொடர்ந்து சென்னை அணி மார்ச் 26-ந் தேதி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த 2 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சென்னை அணி மார்ச் 31-ந் தேதி டெல்லியுடனும் ஏப்ரல் 5-ந் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது.

ஒரு அணி தலா 4 அணியுடன் மோதும் என்ற கணக்கில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools