2024 ஆம் ஆண்டு ஐபில் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்காதா? – ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்காது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர் வருடம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அடுத்த ஆண்டு இந்த மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் ஐபிஎல் தொடர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports