2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டோனி விளையாடுவது உறுதி!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன், அணிகள் தங்களது அணியில் வைத்துக்கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடருக்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷூ சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா என மொத்தம் எட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த அறிவிப்பின் படி, 2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு..

எம்.எஸ். தோனி, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜின்க்யா ரகானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மொயின் அலி, ஷிவம் தூபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, பிரஷாந்த் சொலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீசா பதிரனா.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports